இன்று நண்பகல் முதல் பவர்செட்களை இயக்குவதில் இருந்து விலக ரயில்வே லோகோமோட்டிவ் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால் பணியிலிருந்து விலகுவதாக அச்சங்கத்தின் பிரதம செயலாளரான இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.இதவேளை வேலை நிறுத்தப் போராட்டத்தை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வாபஸ் பெற்றுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து பணிப்புறக்கணிப்பானது கைவிடப்பட்டுள்ளது.