செய்திகள்

ரயில்வே வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது : பய­ணிகள் சிரமம்

ரயில்வே ஊழி­யர்கள் மேற்­கொண்­டுள்ள பணிப் பகிஷ்­க­ரிப்பு 4வது நாளாக இன்றும் தொடர்­கி­றது. இதனால் பய­ணிகள் கடும் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ள­துடன் க.பொ.த. உயர் தரப்­ப­ரீட்­சைக்குத் தோற்றும் மாண­வர்கள் மிகுந்த நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளனர்.

ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை முதல் குறித்த பணிப் பகிஷ்­க­ரிப்பு இடம்பெற்று வருகின்றது.

எனினும் தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரை செவிசாய்க்கவில்லை என்று ரயில்வே காப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் பீ.எம்.பி. பீரிஸ் கூறினார்.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் சில விசேட ரயில்வே சேவைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், இன்றையதினம் அவற்றையும் நிறுத்துவதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button