செய்திகள்

ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

பயணத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பயணிகள் சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாகும் என ரயில்வே திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் குறிப்பிட்டார்.

எனினும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ரயில் சேவைகள் கடந்த காலத்தைப் போலவே இயக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் பஸ் சேவைகள் தொடர்பாக இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button