...
செய்திகள்

ரயில் மீது மோதிய டிப்பர் வாகனம் – சாரதி படுகாயம்-மீரிகமயில் சம்பவம்

இன்று (15) காலை ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

மீரிகம மற்றும் வில்லவத்த ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மீரிகம – திவுலபிட்டிய பிரதான வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணித்துள்ளது.

இதன்போது, கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக பிரதான பாதையின் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

adstudio.cloud

Related Articles

Back to top button


Thubinail image
Screen