செய்திகள்
ரயில் முன் பாய்ந்து தந்தை, மகன் தற்கொலை
வெல்லவ, பல்லேகொட்டுவ பிரதேசத்தில் ரயில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
08மாதங்களேயான குழந்தை மற்றும் 30 வயதுடைய தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தந்தை மதுசங்க எனவும் குழந்தையின் பெயர் ஜனித் கௌசல்ய என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த தந்தை தனது குழந்தையுடன் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.