அரசியல்
ரவி கருணாநாயக்க மீதான வழக்கின் நீதிமன்ற உத்தரவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மத்திய வங்கிய பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய்யான வாக்குமூலம் வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சந்தேகநபர் என பெயரிடப்பட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க பிறப்பித்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு முழுமையாக இரத்து செய்வதா இல்லை என்பது தொடர்பில் எதிர்வரும் 28ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை எதிர்வரும் 26ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதி தரப்பினருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.