உலகம்செய்திகள்

ரஷ்யாவின் தயாரிப்பு விரைவில் மக்களுக்கு..!

கொரோனா தடுப்புக்காக ஒரு டோஸ் மட்டும் போடக்கூடிய தடுப்பூசியை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த தடுப்பூசி ரஷ்ய மக்களுக்கு செலுத்தப்படுமென ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகயில் முரஷ்கோ தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் 25 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு தயாராக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு தன்மையை மேலும் வலுப்படுத்த விரும்புவோர் போன்றவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுமென ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகயில் முரஷ்கோ குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button