உலகம்செய்திகள்

ரஷ்யாவின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு பதிலடி வழங்கப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவின் மூர்க்கத்தனமான மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு பதிலடி வழங்கப்படுமென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னியை நடாத்தும் முறை, அமெரிக்கத் தேர்தல்களில் தலையீடு செய்கின்றமை, ஊடுருவல் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் குறிப்பிட்டார்.

G7 நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கன் பிரித்தானியாவுக்குச் சென்றிருந்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரஷ்யாவின் பொறுப்பற்ற மற்றும் சீர்குலைவான செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

யுக்ரெய்னுக்கு எதிரான அதன் செயற்பாடுகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் இவற்றில் பிரதானமானவையெனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. குறித்த மாநாட்டின் நிறைவில் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com