செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி நாளை மறுதினம் இலங்கைக்கு.

(மாதுருபாகன் ராகவ்)

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகை எதிர்வரும்
செவ்வாய்க்கிழமை நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனம்
தெரிவித்துள்ளது.

15 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக அரச மருந்தக
கூட்டுத்தாபனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஸ்புட்னிக் வி இரண்டு சந்தர்ப்பங்களில்
செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தொகையை பெற்றவுடன் மேலும் 02 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க
ரஷ்யா இணங்கியுள்ளது.

இதேவேளை, நாட்டுக்கு பய்ஸர் பயோ என் டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசிகளை
கொள்வனவு செய்வது தொடர்பில் உரிய நிறுவனத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பய்ஸர் பயோ என் டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமானது,
அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச
மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உடன்படிக்கையில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் கைச்சாத்திட்ட பின்னர்,
தடுப்பூசிகளை நாட்டுக்கு அனுப்பும் முறைமை மற்றும் அளவு என்பன தொடர்பில்
அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button