செய்திகள்

ரஷ்யாவின் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள், அடுத்த இரு வாரங்களில் நாட்டுக்கு கிடைக்கும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 20 மற்றும் 25 ஆம் திகதிக்கிடையில் தடுப்பூசி தொகுதி நாட்டுக்கு கிடைக்கும் என கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினூஷ தசநாயக்க தெரிவித்துள்ளார். 15 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில், அவற்றை பொதுமக்களுக்கு ஏற்றும் நடவடிக்கை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே, சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள எஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினூஷ தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button