...
உலகம்

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாக்கியது !!

ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந் நாட்டு அவசர சேவைப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

விபத்தின்போது ஹெலிகாப்டரில் 16 பேர் இருந்ததாகவும், அவர்களில் 13 சுற்றுலா பயணிகள், ஒரு குழந்தை மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்ததாகவும் அவசர சேவைப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் 8 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காணாமல்போனவர்களை தேடும் பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவசர சேவையின் முதற்கட்ட தகவலின் படி, சுற்றுலா பயணிகளுடன் ஹெலிகாப்டர் குரோனோட்ஸ்கி இயற்கை காப்பகத்தில் உள்ள ஏரியொன்றில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen