...
சினிமா

ரஷ்ய நாட்டு நடிகை அலெக்ஸாண்ட்ரா ட்ஜாவி தூக்கிட்டு தற்கொலை!

இயக்குனரும், நடிகருமான ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த ரஷ்ய நாட்டு நடிகை அலெக்ஸாண்ட்ரா ட்ஜாவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ராப் பாடகி, நடிகை , மொடலிங் மங்கை என பன்முகத் திறமையுடன் உலா வந்தவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த நடிகை அலெக்ஸாண்ட்ரா ட்ஜாவி.

இவர் 2019 ஆம் ஆண்டில் வெளியான ‘காஞ்சனா 3’ என்ற படத்தில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் ராகவா லோரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் கோவாவின் வடக்குப் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

இருபத்தி நான்கு வயதாகும் நடிகை அலெக்ஸாண்ட்ரா, கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோவா பொலிசார், மும்பையிலுள்ள ரஷ்ய நாட்டு தூதரகத்திற்கு முறையான தகவல்களை தெரிவித்து, இது தொடர்பான விசாரணை நடைமுறைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
காதலில் ஏற்பட்ட பிரிவின் காரணமாக அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மர்மமான முறையில் இறந்த அலெக்சாண்ட்ராவின் மரணம் குறித்து கோவா மாநில பொலிசார் வழக்கு பதிவு செய்து, அவரது காதலர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen