சிறப்புசெய்திகள்நுவரெலியாமலையகம்

ராகலை பிரதேசத்தில் மாபெரும் மர நடுகை வேலைத்திட்டம்…

ராகலை பசுமை படையணி வலப்பனை பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு  செய்துள்ள  2000 மருத மரக்கன்றுகள் நாட்டும் “மாபெரும் மரநடுகை” வேலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2019/10/22  கோட்பீல் நீர் வளச் சபை அருகில்  இடம்பெற்றது.

இதன்போது ராகலை பிரதேசத்திற்கு நீர் வழங்கும் முக்கிய நீர் ஊற்று பகுதியான வன  பரிபாலன  திணைக்களத்திற்கு சொந்தமான பூப்பனை காடு மற்றும் நீர்வளச்சபையை   சூழவுள்ள பிரதேசத்தில்  200 மருத மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. ஒரு மாதத்திற்கு முன்பு இக்காடு தீப்பற்றி எறிந்தது குறிப்பிடத்தக்கது.ராகலை பசுமை படையணியின் பதிவு சான்றிதழும் வலப்பனை உதவி பிரதேச செயலாளரினால்  உத்தியோகபூர்வமாக அங்கத்தினர்களுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தோருக்கு நீர் சுத்திகரிப்பு மற்றும் அதன்  முக்கியத்துவம் குறித்து நீர்வளசபை  உத்தியோகத்தர்களால் செயன்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டது  ஒரு விசேட அம்சமாகும்.
 

வலப்பனை உதவி பிரதேச செயலாளர், ராகலை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, வன  பரிபாலன  திணைக்கள அதிகாரி, ராகலை தமிழ் மற்றும் சிங்கள பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், ராகலை பிரதேச வங்கி முகாமையாளர்கள்,ராகலை பசுமை படையணி அங்கத்தவர்கள்  என சூழல் மேல் பற்று  கொண்டோர்  பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
 

வருகை தந்திருந்தோரால் சூழல் பாதுகாப்பு தொடர்பில் ராகலை பசுமை படையணி மேற்கொண்டு வரும் வேலைதிட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும்  தினங்களில் ராகலையைச் சூழவுள்ள  சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் மேலும் 2000 மருத மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download