சமூகம்
ராஜாங்கனை இடம்பெற்ற சோகம்!

ராஜாங்கனை – சோலேபுர பகுதியில் குழந்தை ஒன்று தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சோலேபுர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது பாட்டியுடன் வீட்டில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகிய குழந்தை பரகும்புர கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் நெற்றுமுன் தினம் இரவே குழந்தை உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை ராஜாங்கனை,சோலேபுர பகுதியைச் சேர்ந்த 2 வயது 9 மாதங்கள் என தெரியவந்துள்ளது.