அரசியல்செய்திகள்

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் சுதந்திர தின வாழ்த்து செய்தி …

பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாட்டில் எமது கட்டுக்கோப்பை பலப்படுத்தி செழிப்பாக வாழ்வோம் 73வது சுதந்திர தினத்தில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் திடசங்கற்பம்.    

இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத் தருணத்தில் நாட்டில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருக்குள்ளும் உண்டு  இலங்கையில்  எழுபத்திரண்டு சுதந்திரதின கொண்டாட்டங்களைக் கண்டிருந்த இ.தொ.கா  73வது சுதந்திர தினத்தில் மலையக சமூகத்தின் மாற்றத்திற்க்காகவும், ஏற்றத்திற்க்காகவும் தம்மை அர்பணித்திருக்கும் இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் இடைவிடாது தம்பணியைத் தொடரும் என்பதை உறுதி கொள்வதாக இ.தொ.காவின்  பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது சுதந்திர தினச்  செய்தியில்  தெரிவித்துள்ளார்.

அவர் தமது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது 
அந்நிய ஆதிக்கத்திலுருந்து நாடு விடுதலைப்பெற்று 73 வருடங்களை  எட்டிப்பிடித்துள்ளது. சுதந்திரநாடொன்றின் இறையாண்மையைப் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறையை உருவாக்குதல் எண்ணும் இலக்கோடு நாடு பயணிக்கும் இந்த இனிய சூழலில், சுதந்திர இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்த நாட்டில் ஒரு நிரந்தர சமாதானத்தை இலங்கைத் தாய் தந்தருள எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் மலையகத்திலும், இந்த நாட்டின் இதர பகுதிகளிலும் வசித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் அவர்களது உரிமைகள் சலுகைகள் எல்லாவற்றிலும் விடுதலை பெற்ற மக்களாக இருக்க வேண்டும் என்பது எமது வாஞ்சை “பாதுகாப்பான தேசம் சுபிட்சமான நாடு” என்பதற்கு அமைவாக எமது கட்டுக்கோப்பை மேலும் பலப்படுத்தி இதன் வாயிலாக எமக்குரிய உரிமைகள் , சலுகைகள் ஆகிவற்றை பெற்றுக்கொள்வதற்கு இதன் 73வது சுதந்திர தினத்தில் நாம் திடசங்கற்பம் எடுத்துக் கொள்வோம்.

இத்தினத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என்ற திடமான நம்பிக்கையோடு நாம் எதிர்பார்த்து  நிற்கின்றோம் சகல இனங்களின் மத்தியிலும் சௌபாக்கியம் , ஐக்கியம் , சமத்துவம் , சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் அமைய வேண்டுமென பிராத்திக்கின்றேன்.

cwc media

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com