அரசியல்செய்திகள்

ராஜிதவுக்கு பிடியாணை…

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் என்பன முன்வைத்த விடங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான் பண்டார நெலும் தெனிய இந்த உத்தவை பிறப்பித்துள்ளார்.

சட்ட மா அதிபரின் ஆலோசணைக்கு அமைய , முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று பிற்பகல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

வௌ்ளை வேன் கடத்தல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியமை தொடர்பில்,ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை உத்தரவை பெற்றுக் கொள்ளுமாறு,குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button