உலகம்செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன்,பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலம் கருதி, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே பேரறிவாளனுக்கு, கடந்த வருடம் இரண்டு மாதங்கள் பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button