செய்திகள்
ராணுவ தொப்பி அணிந்து விளையாடுவதா…?

இந்திய வீரர்கள் கிரிக்கெட் விளையாடும் போது இராணுவ தொப்பி அணிந்தது குறித்து ஐசிசி-யிடம் பாகிஸ்தான்அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலில்இறந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவுடனானமூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இராணுவ வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்து விளையாடினர்.
மேலும் இந்த ஆட்டத்தின்மூலம் கிடைக்கும் ஊதியமும் இறந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்வும் இந்தியஅணியினர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து கிரிக்கெட் விளையாடியதை பாகிஸ்தான் அமைச்சர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எனவே, இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.