உலகம்

ரியோ டி ஜெனிரோவில் பயணிகள் பஸ்ஸைக் கடத்திய நபர் சுட்டுக்கொலை.

ரியோ டி ஜெனிரோவில் பயணிகள் பஸ்ஸைக் கடத்திய நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

அத்துடன் பணயக்கைதிகள் அனைவரையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தன்னை ஒரு பொலிஸார் என்று அடையாளபடுத்திய கடத்தல்காரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாவ் கொங்காலோவின் புறநகர்ப் பகுதியை மத்திய ரியோவுடன் இணைக்கும் பரபரப்பான பாலத்தின் மேலாகப் பயணித்த பஸ்ஸில் 37 பேரை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றார்.

கடத்தல்காரனுடன் பொலிஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது பல பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் கடத்தல்காரன் பஸ்ஸினுள் பெற்றோலை ஊற்றி அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.

நான்கு மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடத்தல்காரன் கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பிரேசிலின் சிறப்புப் பொலிஸ் படையினர் ஸ்னைப்பர் தாக்குதல் மேற்கொண்டு கடத்தல்காரனை சுட்டுக்கொன்றனர்.

Related Articles

Back to top button