செய்திகள்

ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!

இன்று காலை தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகளிடம் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக்காக வைத்தியசாலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button