...
செய்திகள்

ரிஷாத்தின் மைத்துனரை ஆஜர் செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்த போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக, யுவதி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, அது குறித்த வழக்கில் ரிஷாத் பதியுதீனின் மைத்துனரை மன்றில் ஆஜர்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பீ  54059/21 எனும்  கறுவாத்தோட்டம் பொலிஸார் தாக்கல் செய்துள்ள குறித்த வழக்கில் எதிர்வரும் 16 ஆம் திகதி அவரை ஆஜர் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரரான கிதர் மொஹம்மட்  சிஹாப்தீன் இஸ்மத் என்பவர், தற்போதும் ஹிஷாலினி விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம், 2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தண்டனை சட்டக் கோவை திருத்தச் சட்டத்தின்  308,358,360 ஆவது அத்தியாயங்களின் கீழ் 18 வயதின் கீழான ஒருவரை அடிமைத் தனத்துக்கு அல்லது கட்டாய ஊழியத்துக்கு உட்படுத்தியமை,  துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை, கடத்தல் அல்லது சுரண்டலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் அந்த வழக்கு விசாரணை இடம்பெறும் நிலையில், அவ்விசாரணைகளிடையே,  முன்னார் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய யுவதி ஒருவரின்  வாக்கு மூலத்துக்கு அமைய  பிரத்தியேக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 தன்னை சுற்றுலா பிரயாணம் ஒன்றினிடையேயும், அதன் பின்னர்  ரிஷாத்தின் வீட்டில் வைத்தும் இரு தடவைகள் ரிஷாத்தின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக வாக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen