கல்விசெய்திகள்

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் சில பீடங்கள் இன்று ஆரம்பம்

ருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி ருகுணு பல்கலைகழத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இறுதி ஆண்டின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. 
முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இராண்டாம் வருட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதுடன் முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்பதாகவும் ருகுணு பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download