செய்திகள்

ரூபவாஹினி கூட்டுதாபனத்தை கையகப்படுத்துவது தன்னிச்சையான செயல்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார். 

ரூபவாஹினி கூட்டுதாபனத்திற்கு தலைவர்களை நியமிப்பது குறித்த சர்ச்சையின் எதிரொலியாகவே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்தார். 

இதன்படி கடந்த வியாழக்கிழமை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக கெலும் பாலித்த மஹிரத்னவை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ருவான் விஜேவர்தன நியமித்தார். 

இந்த நிலையில் தற்போது ரூபவாஹினி கூட்டுதாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையானது ஒரு தன்னிச்சையான செயல் ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி கூட்டுதாபனத்திற்கு பொருத்தமான ஒரு தலைவரை நியமிக்க பல சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும், ஜனாதிபதி அதைத் தடுத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button