மலையகம்
றாகமயில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலி! 2 பேர் காயம்

நுவரெலியா – றாகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும், புகையிரத பாதையின் குறுக்காக கடந்த சென்ற போதே இந்த நால்வரும் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.