செய்திகள்

றைகம், மேற்பிரிவு அருள்மிகு நொண்டி அழகர் திருக்கோயிலின் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

றைகம், மேற்பிரிவு அருள்மிகு நொண்டி அழகர் திருக்கோயிலின் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற் கட்டமாக வழிப் பிள்ளையார் கோயில் அமைக்கும் பணிகளுக்கான சிறப்பு பூஜைகளை றைகம் கீழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு, சர்வாலய கிரியாமணி சிவஸ்ரீ கணேச பரசிவன் சர்மா அவர்கள் கடந்த வாரம் நடத்தியிருந்தார்.


சுமார் 200 நூறு வருடங்களுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் ஆலமரத்தின் அடியில் அழகர் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக அமர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மகாதானபுரத்தில் அமைந்திருக்கும் அழகர் பெருமாள் ஆலயத்திலிருந்து பிடிமண் கொண்டு வரப்பட்டு இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

சிதிலமடைந்து மண் மேடாக காட்சியளிக்கும் ஆலயத்தில் ஒரு ஜீவ சமாதி அமையப் பெற்றிருப்பதும் அந்த ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பை தருகிறது.

ஆலயம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் அந்த ஆலயத்தில் இறைப் பணி செய்த கரூர் கிழவி என்ற மூதாட்டியின் ஜீவ சமாதிதான் அது’ என்ற கருத்தை அங்குள்ள முதியவர்கள் எம்மிடம் கூறினார்கள்.

தமிழகத்தின் ஆலயங்களில் ஜீவ சமாதி அமைய பெற்றிருப்பது வழமைதான் ஆனால் இலங்கையில் ஜீவ சமாதி அமையப் பெற்றுள்ள ஆலயங்கள் மிகவும் குறைவு. பெருந் தோட்டங்களில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

அழகர் ஆனந்த தாண்டவம் ஆடும் போது ஒற்றைக் காலில் அவர் நின்று ஆடுவதால் அவரை நொண்டி அழகர் என்று நம்வர்கள் அழைத்திருக்கிறார்கள்.

சமூக தன்னார்வலர் ராமராஜ் தியாகராஜாவின் தலைமையில் நடைபெறும் இந்த பெரும் பணிகளில் றைகம், கீழ் பிரிவைச் சேர்ந்த செல்லையா, மனோகரன், மற்றும் திரு. சதாசிவம், செல்லதுரை லங்கேஸ்வரன் உள்ளிட்டடோருடன் மேலும் பல அடியார்கள் முன் வந்து இறைப் பணி செய்கிறார்கள்.

இந்த இறைப் பணியில் இணைந்து நீங்களும் உதவி செய்ய விரும்பினால் தயவு செய்து எமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 0779614611, 0760325307

Related Articles

Back to top button


Thubinail image
Screen