செய்திகள்

லங்கா ஐ .ஓ. சி நிறுவனம் பெற்றோல் விற்பனையை மட்டுப்படுத்தியது!

உடன் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் விற்பனையை மட்டுப்படுத்த LIOC தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 7,000 ரூபாவிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு ரூ.2,500 பெற்றோல் வழங்கப்படும், இரு சக்கர வாகனங்களுக்கு பெற்றோல் ரூ.1,500 மாத்திரமே வழங்கப்படும்.

நேற்று இரவு முதல் இந்த ஒழுங்குமுறை அமுலில் உள்ளது.

Related Articles

Back to top button