விளையாட்டு

லசித் மலிங்க எனும் ஆளுமை ஒருநாள் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது உறுதியானது .

இலங்கை அணியின் நட்சத்திர மற்றும் நம்பிக்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் .ஏற்கனவே இது குறித்து ஊடகங்கள் பல கருத்துக்களை வெளியிட்ட போதிலும்,ஓய்வு பெறுவதை லசித் மலிங்க இன்று உறுதிப்படுத்தினார்.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் முகப்புத்தக நேரலையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

26 ஆம் திகதி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற உள்ளது. 

இந்த போட்டியின் பின்னர் தான் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

எனவே 26 ஆம் திகதி தனது இறுதி போட்டியை கண்டுகளிக்க அனைவரையும் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வருமாறும் லசித் மலிங்க ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button