...
செய்திகள்விளையாட்டு

லசித் மாலிங்க விடுத்துள்ள கோரிக்கை

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வூப் பெறும் தீர்மானத்தை பானுக்க ராஜபக்ஸ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவிக்கின்றார். பானுக்க ராஜபக்ஸ, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வூப் பெறவுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, லசித் மாலிங்க, தனது டுவிட்டர் தளத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்

”சர்வதேச அளவில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது இலகுவான விடயம் அல்ல. வீரர்கள் எப்போதும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அதனை நான் உண்மையாகவே நம்புகின்றேன். இலங்கை கிரிக்கெட்டிற்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டியுள்யது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வூப் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார”.

Related Articles

Back to top button


Thubinail image
Screen