...
நுவரெலியாமலையகம்

லிந்துலையில் குளவிக்கொட்டு – ஐந்து முதியவர்கள் பாதிப்பு

லிந்துலை – டில்லிகுல்ட்ரியில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 முதியவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐந்து பேரும் நாட்கூலிகளாக வெளி பிரதேசங்களில் இருந்து தினமும் வேலைக்காக தோட்ட நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் நபர்கள் ஆவர்.

டில்லிகுல்ட்ரி தோட்டத்தில் தேயிலை மலையில் வளர்ந்து கிடக்கும் புற்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே குளவி கூடு கலைந்து குறித்த ஆண் தொழிலாளர்கள் 5 பேரையும் தாக்கி உள்ளதாகவும் பின்னர் அவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மலையகத்தில் பல்வேறு பெருந்தோட்டங்களில் லாபத்தை நோக்கமாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக மாதாந்தம் சம்பளத்தை வழங்கி ஊழியர்களை பயன்படுத்தும் நிலைக்கு மாறாக நாட்கூலிகளாக வெளி பிரதேச தொழிலாளர்களை பயன்படுத்துவதை காண முடிகிறது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen