மலையகம்

லயக்குடியிருப்பில் திடீர் தீ பரவல்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா கீழ்பிரிவு பிரிவு தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் இரண்டு வீடுகள் முற்றாகவும், மற்றைய வீடுகள் பகுதியளவிலும் எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11.45 (05/03/2019) மணியளவில் திடீர் தீ பரவியுள்ளது.

சம்பவத்தில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் இரண்டு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு பகுதியளவிலும் எரிந்துள்ளது.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.

Photo (1)

Photo (2)

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button