மலையகம்

லயன் குடியிருப்பில் தீ பரவல் -லிந்துலை பகுதியில் சம்பவம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூம்வூட் தோட்டத்தின் உள்ள 5 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவல் நேற்றிரவு 11.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதனால் சில வீடுகள் சேதமடைந்துள்ளதோடு அதில் ஒரு வீட்டின் அறை முற்றாக தீக்கரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது பொலிஸாரின் உதவியோடு பிரதேச மக்கள் தீயினை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ பரவலுக்கான காரணம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button