செய்திகள்
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்..

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னாள் தலைவர் விஜித ஹேரத் பதவி விலகியதை அடுத்து முதித பீரிஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இவர் இதற்கு முன்னர், லிட்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.