செய்திகள்நுவரெலியாமலையகம்

லிந்துலையில் அப்பாவி நோயாளிகளிடம் ஏமாற்றி பணம் பெற்றவர் கைது ..?

லிந்துலையில் அப்பாவி நோயாளிகளிடம் ஏமாற்றி பணம் வாங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிந்துலை பகுதியில் சமூகசேவை அமைச்சின் கீழ் பிரதேச நோயாளிகளுக்கு கடந்த மாதம் இலவசமாக வழங்கப்பட்டதாக கூரப்படும் சக்கர நாற்காலிகள் மற்றும் மூக்கு கண்ணாடிகள் போன்றவற்றை பெற்றுக்கொண்ட அப்பாவி தோட்டதொழிலாளர் ஒவ்வரிடமும் தலா 1000 ரூபா வசூல் செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று லிந்துலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் தற்போது லிந்துலை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு,நாளைய தினம் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்பும் இவ்வாரன பல குற்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக போலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button