ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழுப்பு நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கார் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்திற்கு வாகன சாரதியின் நித்திரையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.