செய்திகள்நுவரெலியாமலையகம்

லிந்துலையில் வீடொன்றில் தீ பரவல் தொடர்பாக விசாரணை ..

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பம்பரகலை குட்டிமலை தோட்ட குடியிருப்பு ஒன்றின்‌‌ தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவல் நேற்றுமுன்தினம் 9ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீ பரவல் தொடர்பாக தெரிவதாவது கடந்த 9ம் திகதி இரவு 11.30 மணியளவில் தனி வீடு ஒன்றின் கூறை சீட்டில் ஏதோ வெடி சத்தத்துடன் வீசப்படுவதையும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவலையும் கண்ட பிரதசேச வாதிகள் உடனடியாக தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், இதனால் பெரும் தீ பரவல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மற்றும் நுவரெலியா தடவவியல் பொலிஸார் குழுக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பாலேந்திரன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com