செய்திகள்

லிந்துலை இளைஞன் கடவத்தையில் மரணம்!

லிந்துலை நோனாத்தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வேலைசெய்து வந்தவருமான அந்தோனிகுருஸ் ஹலோசியஸ் என்ற இளைஞன் (1/1) நேற்று சக ஊழியர்களுடன் கடவத்தை பகுதியில் நீச்சல் தடாகத்தில் குளிக்க சென்று விபத்துக்குள்ளானதில் மரணமாகியுள்ளார்.

நீச்சல் தடாகத்தில் நண்பர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தவறுதலாக தலை பகுதி அடிபட்டதனால், உடனடியாக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Back to top button