செய்திகள்மலையகம்

லிந்துலை சுகாதார பிரிவு ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 67 பாடசாலைகளில் கடமை புரியும் சுமார் ஆயிரத்து 100 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி இன்று முதல் 16 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படும் என, லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஹோல்புறுக்கு தமிழ் வித்தியாலயத்திலும், லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும், அக்கரபத்தனை, மெராயா ஆகிய இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய, பாடசாலைகளில் பணி புரியும் அதிபர் , ஆசிரியர்கள், பாடசாலைகளில் பணிபுரியம் ஊழியர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Related Articles

Back to top button