கல்விநுவரெலியாமலையகம்

லிந்துலை – சென்ரெகுலர்ஸ் தோட்டத்தில் பாராட்டு விழா!

மலையகம் FM மற்றும் மலையகம்.lk ஊடக அனுசரணையில் லிந்துலை – சென்ரெகுலர்ஸ் தோட்டத்தில் இருந்து கடந்த 2018 வருடம் க.பொ.த.ச/தரப் பரீட்சைக்குத்
தோற்றி சித்தி பெற்று உயர்தரத்துக்கு தெரிவான 13 மாணவர்களுக்கான பாராட்டுவிழா இந்து சமய
பேரவையின் ஏற்பாட்டில் அதன் நிருவாக சபை உறுப்பினர் மைக்கல் பெஞ்சுமன் தலைமையில்.
நு/சென்ரெகுலர்ஸ் த.வியில் இடம்பெற்றது.

சென்ரெகுலர்ஸ் தோட்ட கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கிய
நிகழ்வான இந்த பாராட்டு விழாவில் மேற்படி மாணவர்கள் சித்திபெற காரணமான அதிபர் மற்றும்
ஆசிரியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

பாராட்டப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது உயர்தரக்கல்வியை தொடர்கின்றனர் . இவர்களில்
செல்வி. பாலகிருஷ்ணன் மதுர்ஷான 9A தர சித்திகளை பெற்று சென்ரெகுலர்ஸ் தோட்ட கல்வி வரலாற்றில்
க.பொ.த.ச/தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.

குறிப்பிட்ட மாணவர்கள் அனைவரும் நு/ சென்ரெகுலர்ஸ் த.வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும்.
சாதாரண தரக் கல்வியை நு/மெராயா த.ம.வித்தியலயத்திலும்
நு/ ஹோல்புறுக் த.ம. வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Related Articles

Back to top button
image download