மலையகம்

லிந்துலை பம்பரகலையில் உடைந்து விழும் நிலையில் பஸ் தரிப்பிடம்..

ராஹன்வத்த 475/u கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை ராஹன்வத்த பிரதான வீதியில் பம்பரகலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் பிரதான பஸ் தரிப்பிடம் பொது மக்கள் பாவிப்பதற்கு உகந்த நிலையில் இல்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இக்கட்டிடமானது நுவரெலியா பிரதேச சபையினால் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கு பிறகு இக்கட்டிடம் எவ்வித புணரமைப்பு செய்யப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது முழுமையாக பொதுமக்கள் பாவனைக்கு ஏற்றதாக இல்லாத இக்கட்டிட சுவர்களில் வெடிப்புகள் காணப்படுவதுடன் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

இப்பாதை ஊடாக நாளாந்தம் பாடசாலை மாணவர்கள் ,பொதுமக்கள், நோயாளிகள் என பலர் சொல்கின்ற நிலையில் மழை, வெயில் காலங்களில் பஸ் வரும்வரை அமர்ந்து இருக்க இருக்கைகள் கூட இல்லாத நிலை காணப்படுகிறது.

தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தேர்தல் வட்டாரத்தின் கீழ் இந்த பஸ் தரிப்பிடம் காணப்படுவதால் ,அக்கரபத்தனை பிரதேச சபையின் ஊடாக இந்த பஸ் தரிப்பிடத்தை புணரமைப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தருமாறு இப்பிரதேச மக்கள் பணிவான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் கவணத்தில் கொண்டு இதற்கான தீர்வை விரைவில் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

பா.பாலேந்திரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button