காலநிலைமலையகம்

லிந்துலை பெரிய ராணிவத்தையில் இடி மின்னல் தாக்கியதில் பாரிய மரம் முறிவு 6 தொழிலாளர்கள் காயம்..

லிந்துலை பெரிய ராணிவத்தையில் இடி மின்னல் தாக்கியதில் பாரிய மரம் முறிவு ஒன்று ஏற்பட்டுள்ளதோடு சம்பவத்தில் 06 தொழிலாளர்களுக்கு காயம்.
.
குறித்த சம்பவம் இன்று (08) மாலை மூன்று மணி  அளவில் இடம்பெற்றுள்ளது.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
சம்பவம் தொடர்பாக தெரியவருவது   பாரிய மரம் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதினால் குறித்த  மரம் பல துண்டுகளாக சிதறி வீசப்பட்டுள்ளதோடு அச்சந்தர்ப்பத்தில்  குறித்த பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த 6 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில், பம்பரகலை தோட்ட வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.
பம்பரகலை தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களில் 03 பேர்  வீடு திரும்பியதோடு .மேலும் 03 தொழிலாளர்கள் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com