லிந்துலை லிப்பக்கலை தோட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், அக்கரப்பதனை பெரிய நாகவத்த யை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ?

uthavum karangal

லிந்துல லிப்பக்கலை தோட்டத்தில் 22 வயதுடைய ஆண் ஒருவருக்கு Covid 19 தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது குறித்த நபர் தெமட்டகொட பிரதேசத்தில் பணியாற்றியுள்ளதோடு அவரின் மனைவிக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது.மனைவியை நேற்றய தினம் மாத்தறை வைத்தியசாலைக்கு தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன கணவனை அம்பாதோட்ட வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது

இதேவேளை கொழும்பில் பணிசெய்து விட்டு தீபாவளி பண்டிகைக்கு அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்டத்திற்கு வந்த 52 வயதுடைய ஒருவர் தனிமைபடுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பி சி ஆர் பரிசோதனையின் போது தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து இவரும் இன்று அம்பாதோட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து பெரிய நாகவத்தை தோட்டமுழுவதும் லிந்துலை பொதுசுகாதார அதிகாரிகள் அக்கரப்பத்தனை பிரதேச சபையும் அக்கரப்பத்தனை பொலிஸார் இணைந்து தொற்று நீக்கி தெளித்தனர்.மேலும் இவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டனர்.

துவார்கன்

தொடர்புடைய செய்திகள்