செய்திகள்நுவரெலியாமலையகம்

லிந்துலை வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் படுகாயம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  பாடசாலை மாணவிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியிலேயே இவ்விபத்து இன்று (07) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், லிந்துலையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பஸ் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததோடு, அதில் சாரதி மட்டும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

எனினும் இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பஸ் சாரதியை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிரிஷாந்தன்

Related Articles

Back to top button
image download