Breaking News

லிந்துலை – வாகன விபத்த்தில் நடிகை உயிரிழப்பு..

டி.சந்ரு.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை பாலத்திற்கருகில் (31)அதிகாலை ஒரு மணியலவில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன வயது(75) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு வருகை தந்துள்ள குறித்த நடிகை இன்று (31)அதிகாலை நுவரெலியா- ஹட்டன் வழியாக கொழும்புக்கு தனது காரில் பயணித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் பயணித்த கார் லிந்துலை பெரிய பாலத்திற்கு அருகில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த காரை செலுத்தி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கார் சாரதி லிந்துலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த நடிகையின் சடலம் மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button