செய்திகள்பதுளைமலையகம்

லுணுகலை பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆர்ப்பாட்டம்!

லுணுகலை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த வாகன சாரதிகளினால் லுணுகலை பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு தாக்குதலுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களையும் பொது இடத்தில் முறைக்கேடான முறையில் நடந்து கொண்டவர்கள் என 8 பேர் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகலை பிரதேசத்திற்கு
எரிபொருளை கொண்டு வருவதற்கு குறித்த கிராம உத்தியோகத்தர் முயற்சி செய்யவில்லை என்று கூறியே தாக்கியதாக லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லுணுகல பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் லுணுகலை கிராம சேவக உத்தியோகத்தர்களும் இணைந்து லுணுகலை பிரதேச சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வரிசையில் நிற்பவர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இருப்பினும் தம் சக ஊழியர் தாக்கப்பட்டமைக்கு சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி லுணுகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டம் நடைபவணியாக லுணுகலை நகரை சென்றடைந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button