மலையகம்

லோவர் கிறேன்லி தோட்டத்த்தில் பெண்களுக்கான சுகாதாரம் ,முதல் உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

அக்கரப்பத்தனை,லோவர் கிறேன்லி தமிழ் பாடசாலையில் பெண்களுக்கான (Days for Girls) சுகாதாரம் மற்றும் முதல் உதவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று அதிபர் திரு பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விழ்ப்புணர்வு திட்டத்தை அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகைதந்திருந்த பெண்கள் குழுவினர்களால் முன்னெடுக்கப்பட்டது .

குறித்த பிரதேச மாணவிகளுக்கும், தாய்மார்களுக்கும் மிகவும் அவசியமான விடயம் என்பதால் குறித்த நிகழ்வை ஒழுங்கு செய்ததாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் காலங்களில் இதுபோன்று ஏனைய பிரதேச பெண்களுக்கும் சுகாதார, முதலுதவி பாதுகாப்பு சம்பந்தமாக கற்பித்து கொடுப்பதற்காக தாம் தயராக இருப்பதாக நிகழ்வை ஒழுங்கமைத்த அவுஸ்த்திரேலியாவில் வசிக்கும் அக்கரப்பத்தனை கிலாஸ்க்கோ தோட்டத்தை சேர்ந்த வல்லடியான் பிள்ளை சத்தியா தெரிவித்தார்.

Related Articles

Back to top button