செய்திகள்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மக்கள் அவதானம்

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் பல பகுதிகளில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த நால்வரும் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் கேகாலை மாவட்டத்தில் ஒருவரும் அடங்குவதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், 48,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5,835 ​பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ள நிலைமை, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு 1,668 இற்கும் அதிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button