செய்திகள்

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டைட்லி சூறாவளி!

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டைட்லி சூறாவளி இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்வதன் காரணமாக, நாட்டின் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த நிலையில், மேல், மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் மழை தொடரும்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், அதிகளவான மழை வீழ்ச்சி வரகாபொல பிரதேசத்தில் பதிவானது. அங்கு 83.4 மில்லிமீற்றராக மழை வீழ்ச்சி பதிவானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரெஹென்பிட்டி பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழ் இறங்கியுள்ளதுடன், குறித்த பகுதி ஊடாக பயணித்த பாடசாலை சேவையில் ஈடுபடும் சிற்றூர்ந்து ஒன்றும் விபத்துக்குள்ளானது.

எனினும், அந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com