காலநிலைசெய்திகள்

வங்காள விரிகுடா சூறாவளி அபாயம் இன்றும் மழை.

வங்காள விரிகுடாவில் நிலவும் சூறாவளி அபாயம் காரணமாக நீண்டகால மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Articles

Back to top button