செய்திகள்

வங்கி – வர்த்தக நிறுவன நடவடிக்கைகள் இன்று வழமைபோன்று இடம்பெறுகின்றன.

இன்றைய (12) தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அரச விடுமுறை தினம், அரச மற்றும் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாது என அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

விடுமுறை தினங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை தினம் இன்று (12) இடம்பெற்றிருப்பதினால் மக்களின் வசதி கருதி இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக  அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டார்.

எனினும், வங்கி அல்லது வர்த்தக விடுமுறைக்கு இந்தத் தினம் பொருந்தாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அளககோன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிக்கையில் இதற்போதுள்ள நடைமுறைகளின் அடிப்படையில் 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஏற்கனவே முற்பதிவினை மேற்கொண்டவர்கள்இ நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களின் மூலம் திணைக்களத்தின் சேவைகளை பெற முடியும் .

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக மாவட்ட அலுவலங்களில் முற்பதிவு செய்தவர்கள், குருணாகல், கம்பஹா, அநுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்ட அலுவலகங்களிலும் நாளைய தினம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம்  குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button