செய்திகள்

இலங்கையில் மற்றுமொரு பல்கலைக்கழகம்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் என்பனவற்றின் கற்றல் கிளைகளில் உயர் கல்வியை வழங்கும், மேம்படுத்தும் அத்துடன் அபிருத்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com